ஆரணியில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆரணியில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக கட்சியின் சார்பில் தமிழக அரசை கண்டித்து நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சுந்தர் ராஜன் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார்

மேலும் கடந்த நவம்பர் மாதம் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் நிவாரண தொகையாக ஏக்கருக்கு 15ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் மற்றும் நெசவாளர்கள் இழப்பிற்கு தகுந்த நிவாரணம் வழங்கவும் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை, கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வட்டாட்சியர் கெளரியிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்ற தேமுதிக கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரும் உள்ளே செல்லக் கூடாது என்று அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உடன் சில தேமுதிக கட்சியினர் சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

வட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்ற தேமுதிக கட்சியினரை போலிசார் தடுத்து நிறுத்திய சம்பவம் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஷான்பாஷா, மாவட்ட அவைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு. தலைமை செயற்குழு உறுப்பினர் திருஞானம், அரிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், அருள்தாஸ், மோகன் ராஜ், அன்பழகன், செந்தில், மற்றும் 100க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சியினர் கலந்து கொண்டனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..