ஆம்பூர் அருகே குக்கர் வெடித்து கட்டிட மேஸ்திரி மனைவி பலி

ஆம்பூர் அருகே குக்கர் வெடித்து கட்டிட மேஸ்திரி மனைவி பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஐயனேரி மேடுவை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் மனைவி செல்வி (40) நேற்று கேஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடிரென குக்கர் வெடித்தது இதனால் அலறி அடித்து கொண்டு செல்வி வீட்டை விட்டு வெளியே ஓடினார். அப்போது நிலைதடுமாறி கால் தவறி தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

பின்னர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்வி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரழந்தார் இது குறித்து உமரபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..