ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பெருமளவு ஊழல் நடைபெறுவதாக ஒன்றிய குழு உறுப்பினர் பேரில் திட்ட இயக்குனர், முதலமைச்சர் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைக்கு ஜேசிபி எந்திரம் மூலம் வேலை செய்துவிட்டு கமிஷனாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கொடுக்க ஊராட்சி மன்ற தலைவர்களிடம் நிர்பந்திப்பதா கவும்
ஒன்றிய குழு கூட்டம் நடைபெறும் அன்று தற்செயல் விடுப்பு எடுப்பதா கவும், மேலும் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழு பெருந்தலைவர் அனைவருடமும் மரியாதை இல்லாத வகையில் நடந்து கொள்வதாகவும் மற்றும் எனக்கு எம்பி வரை ஆள் உள்ளார்கள் என்றும் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்றும் நேரடியாக பேசுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ரேணுகோபால் கலைஞரின் கனவு இல்லம் மூலம் பயன்பெறும் பயனாளிகளிடம் நேரடியாக வெண்டர் மூலமாக ஒரு வீட்டிற்கு 50,000 பெற்றுள்ளார் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.