திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே அழகுசேனை
ஊராட்சிக்குபட்ட சூளைமேடு பகுதி வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில்
உள்ளன.
மேலும் இந்த பகுதியில் திருவண்ணாமலை போளுர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு
செல்லும் வாகனங்கள் 24மணி நேரம் போக்குவரத்து சென்று வருகின்றன. ஆனால் பல
நாட்களாக சூளைமேடு பகுதியில் உள்ள மின்விளக்கு எரியாமல் இருட்டில்
மூழ்கியுள்ளன.
இதனால் கனரக வாகனங்கள் தென் மாவட்டத்திற்கு செல்லும்
வாகனங்கள் உள்ளிட்டவை விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நேற்று முன்தினம்
இதே பகுதியை சேர்ந்த நபர் சாலையில் ஓரமாக நடந்து செல்லும் போது இருட்டில்
அடையாள தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து வேலூர் தனியார் மருத்துவமனை
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் இது சம்மந்தமாக வார்டு உறுப்பினர் சீனிவாசன் ஊராட்சி நிர்வாகம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் பல முறை புகார்
மனு அளித்தும் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை
என்பதால் ஆத்திரமடைந்த சூளைமேடு கிராம பொதுமக்கள் ஓன்றுணைந்து எரியாத
மின்கம்பங்களில் தீபந்தம் ஏந்தி மின்விளக்கு அமைக்க கோரி போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளாவிட்டால் பெரியளவில் போராட்டத்தில்
ஈடுபடபோவதாக சூளைமேடு பகுதி பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினார்.