சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில்.. சூப்பர் அட்டவணை.

சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில்.. சூப்பர் அட்டவணை.

ஆரணி: சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி மின்சார ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருவண்ணாமலை ரயிலுக்கான நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது..

சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், காலை 9.50க்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரயில் பாஸ்ட் மின்சார ரயில் ஆகும். சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளதாக இருக்கிறது. சென்னையில தினமும் வேலைக்கு சென்று வர இந்த மின்சார ரயிலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாஸ்ட் மின்சா ரயில் என்பதால் முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்..

இந்த ரயிலை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் நோக்கில் வரும் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.அண்மைக்காலங்களாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது..

இது ஒருபுறம் எனில் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் என சிறப்பு நாட்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்கிறார்கள். இவர்களின் வசதிக்காக பவுர்ணமி கிரிவலத்தையொட்டி ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் ஏற்கனவே இயக்கப்படுவது வழக்கம். இது தவிர தினசரி கூடுதலாக ஒரு ரயிலை திருவண்ணாமலைக்கு தினமும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை இல்லை. பஸ்கள் மூலம்தான் பெருமளவில் பக்தர்கள் செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து வேலூர் வரை இயக்கப்படும் பாஸ்ட் மின்சார ரயில், திருவண்ணாமலை வரை நீட்டித்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று ரயில்வே போர்டுக்கு கோரிக்கை பறந்தது. இதை பரிசீலித்த டெல்லியில் உள்ள ரயில்வே போர்டு, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இயக்கப்படும் பாஸ்ட் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது..

இந்நிலையில் தெற்கு ரயில்வே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வரும் மே 2ம் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இயக்கப்படும் பாஸ்ட் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீடிக்கப்படுகிறது..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..