திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு தயாராகும் தேர்..

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு தயாராகும் தேர்..

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது..

விழாவின் நிறைவாக 26ம் தேதி மகா தீப திருவிழா நடைபெறும் இதனையொட்டி தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது..

இந்த நிலையில் தீபத் திருவிழா உற்சவத்தின் 7ம் நாள் அன்று மாதவிதியில் பவனிவரும் பஞ்சரதங்களை சீரமைத்து அதன் உறுதி தன்மையை சரி பார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது..

மகாரதம் பராசக்தி அம்மன் தேர் சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது..

அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும் எடையிலும் மிகப்பெரியது. மகாரதத்தின் அச்சு பீடம் விதானம் ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது…

மேலும் இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் முடித்து பொதுப்பணி துறையின் கட்டுமான உறுதிச் சான்று பெறப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்..

சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு தகடுகளை அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது..

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த பாதுகாப்பு பணியானது சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

தீபத் திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு பணியானது தொடரும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..