திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட எஸ்.எல்.எஸ் மில் எதிரில் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனியார் ஓட்டல் நடத்தி வருகின்றார்.
மேலும் வேலை முடிந்து இரவு நேரங்களில் தனது ஓட்டல் வெளியே பைக்கை நிறுத்தி வைக்கபடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் இரவு பைக்கை நிறுத்தியுள்ளார்.
இன்று விடியற்காலை நோட்டமிட்ட 3 முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பைக்கை இரும்பு ராடால் உடைத்து திருடி சென்றுள்ளனர். இன்று காலையில் ஓட்டல் உரிமையாளர் வெங்கடேசன் வந்து பார்த்த போது பைக் காணவில்லை என கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் தனது ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சி ஆய்வு செய்த போது ஓரே பைக்கில் 3 முகமூடி கொள்ளையர்கள் வந்து இரும்பு ராடால் உடைத்து பைக்கை திருடி செல்லும் காட்சியை கண்டுடறிந்தார்.
இதனையடுத்து பைக் திருட்டு சம்பவம் குறித்து ரணி தாலுக்கா போலீசில் ஒட்டல் உரிமையாளர் வெங்கடேசன் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து 3முகமூடி அணிந்துருந்த கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.