கடந்த திங்கட்கிழமை அன்று புரட்டாசி மாசம் தொடங்கியது புரட்டாசி மாசம் தொடக்கத்திலிருந்து இறைச்சிக் கடைகள் அசைவ உணவுகள் வெறிச்சோடி காணப்பட்டன
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்குரிய மிக அற்புதமான மாதம்bபுரட்டாசி மாதத்திற்கு என்று எத்தனையோ தனிச்சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று புரட்டாசி சனிக்கிழமை விரதம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களும் உண்டு. இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் விரதம் இருந்து வழிபடுவதும் உண்டு. புரட்டாசி சனிக்கிழமையன்று அனைவரும் விரதம் இருந்து திருமால் வழிபாட்டை மேற்கொண்டால் அளவில்லாத பலன்கள் கிடைக்கும் என சொல்வார்கள்.
நேற்று முதல் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் இன்று ஆரணி பகுதியில் ஒரு சில இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன
ஆரணி புதிய பேருந்து நிலையம் காஜீவாடை பகுதிகளில் புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமையான இன்று இறைச்சிக் கடைகள் திறந்து வைத்திருந்தன இறைச்சி வாங்க யாரும் வராததால் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன