சமுக வலைதளங்களில் மோதிக்கொள்ளும் புலி – புலி முருகன் ரசிகர்கள் நேற்று முதல் கேரளாவில் BOYCOTT LEO என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது கேரளாவில் லியோ படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதன் காரணம் தெரிய வந்துள்ளது
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. ரசிகர்களிடம் அதிக ஹைப் கொடுத்துள்ள லியோ, கோலிவுட்டின் மெகா ” இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
விஜய் – லோகேஷ் கூட்டணி தவிர, LCU கான்செப்ட்டில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக இது உருவாகி வருவதும் தான் இந்த எதிர்பார்ப்புக்கான காரணம். ” தமிழ் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கன்னடம், இந்தி ரசிகர்களும் லியோ படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.
முக்கியமாக தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கே திரையிடப்படும் என கூறப்படுகின்றன. இதனால் தமிழ் ரசிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு, மற்ற மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் லியோ கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை முதல் பாய்காட் லியோ என்ற ஹேஷ்டேக் திடீரென டிரெண்டாகி வருகிறது. கேரள ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்படும் இந்த ஹேஷ்டேக், விஜய் ரசிகர்களையும் லியோ படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மம்முட்டி மோகன்லால் அளவிற்கு விஜய்க்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மல்லுவுட் ஹீரோக்களை விட, விஜய்யின் படங்களை அவர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
இப்படியான சூழலில், விஜய்யின் லியோ படத்துக்கு எதிராக பாய்காட் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து தற்போது பாய்காட் லியோவுக்கான காரணம் தெரியவந்துள்ளது.
அதில் ஒன்றாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை விஜய் ரசிகர்கள் மரியாதை இல்லாமல் பேசியதாக சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் மோகன்லால் குறித்து ட்ரோல் செய்ததாகவும் தெரிகிறது. இதனால் தான் மோகன்லால் ரசிகர்கள் Kerala Boycott Leo என ட்ரெண்ட் செய்து வருகிறார்களாம்.
அதேநேரம் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, கடந்த 4 தினங்களாக லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதில் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தனித்தனி போஸ்டர்கள் வெளியாகின.
ஆனால் விஜய்யை அதிகம் நேசிக்கும் கேரளா ரசிகர்களுக்காக மலையாளம் போஸ்டர் வெளியாகவில்லை என்பதே பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளளன. இதனால் தான், விஜய்யின் லியோ படத்தை கேரளாவில் புறக்கணிப்போம் என சேட்டன்மார்கள் கிளம்பி விட்டார்களாம்.
இந்நிலையில் இந்த பிரச்சினையை சமாளிக்க, விரைவில் லியோ படக்குழுவினர் கேரளா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.