திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே மலைப்பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பிராமணர் தெருவில் வசிக்கும் முருகாச்சாரி மகன் புருஷோத்தமன் (39) இவர் பத்திரப்பதிவு எழுத்தராக பணிபுரிந்துள்ளார்..
கடந்த 28ஆம் தேதி புருஷோத்தமன், தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவி ராஜேஸ்வரி மகள் கனிஷா மகன் ஹேமன் இவர்களுடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் மேல்மருவத்தூரில் இரவு தங்கி விட்டு நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள புருஷோத்தமனின் நண்பர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் தங்கி உள்ளார்.
மேலும் அன்று இரவு வெளியே சென்ற புருஷோத்தமன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று காலை படவேடு நட்சத்திர குன்று மலையில் உள்ள மரம் ஒன்றில் புருஷோத்தமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது..
சந்தவாசல் போலீசார் விசாரணை.
மேலும் புருஷோத்தமன் இறந்தது குறித்து உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு போலீசார் புருஷோத்தமன் இறந்ததற்கான காரணத்தை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர்..
போலீசார் விசாரணையில் புருஷோத்தமன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..