திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன் பங்கேற்றார்
மேலும் இதில் உறுப்பினர் சேர்க்கை குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் படிவங்கள் பதிவேற்றம் உள்ளிட்டவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஆரணி போளுர் செய்யார் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
இதில் ஆரணி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மத்திய நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் தசரதன், வட்டார மண்டல தலைவர் குணாநிதி, மற்றும் சரவணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்