திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் பைக் திருடு போவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டிஸ்வரி உத்தரவின் பேரில்
ஆரணி தாலுக்கா ஆய்வாளர் (பொறுப்பு) கார்த்திகா தலைமையில்; தனிப்படை போலீசார் சென்னை ஆரணி சாலை இரும்பேடு கூட்ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்போது பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு முரணாக பதிலளிக்கவே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை மேற்கொண்டதில் பைக் திருட்டில் ஈடுபட்டது ஓப்புக் கொண்டனர்கள்.
விசாரணையில் ஆரணி அடுத்த பார்வதி அகரம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் அண்ணாமலை (21) மற்றும் நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரே~;(27) என்பது தெரிய வந்தன
பின்னர் அவர்களிடமிருந்து 12 பைக் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நீதி மன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.