ஆரணி அருகே விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆயூஸ் யாகம் நடைபெற்றது இதில் ஏராளனமான தேமுதிக கட்சயினர் பங்கேற்பு.

ஆரணி அருகே விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆயூஸ் யாகம் நடைபெற்றது இதில் ஏராளனமான தேமுதிக கட்சயினர் பங்கேற்பு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீP அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர் ஆலயத்தில் தேமுதிக சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் பாஸ்ரகன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆயூஸ் யாகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சரவணன் பங்கேற்றார்.

மேலும் தீராத வியாதிகளை தீர்க்கும் எந்திரவடிவம் கொண்ட ஸ்ரீ வினைதீர்க்கும் காமாட்சி அம்மன் ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகத்தில் யாகசாலை அமைத்து மஞ்சள் குங்குமம் பன்னீர் பட்டுபுடவை உள்ளிட்ட 501மூலிகை மற்றும் மங்கள பொருட்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டியும் ஆயுள் அதிகரிக்க வேண்டியும் ஆயூஸ் யாகம்; ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர் மூலவருக்கு சிறப்பு அபிN~கம் செய்து வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ரவிக்குமார் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஓன்றிய செயலாளர்கள் கொளத்துர் செந்தில் மெய்யூர் அன்பு செய்யார் மோகன்ராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் கருணாகரன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சங்கர் தொழிற் சங்க துணை தலைவர் பார்த்தீபன் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் பாக்கியராஜ் செய்யார் நகர செயலாளர் கண்ணன் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஆறுமுகம் மற்றும் திரளான தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்பு. இறுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..