விஜய் நடித்து தீபாவளியன்று வெளிவரவுள்ள லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். பாதுகாப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
லியோ பட தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை என்று டிவிட்டர் இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் விஜய் ரசிகர்களிடையே லியோ ஆடியோ லாஞ்ச் அனுமதி மறுக்கப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இதனை தொடர்ந்து போஸ்டர் மூலம் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
” ஆடியோ லாஞ்ச் இல்லைனா… என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா ? ” ’’இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி ,வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது , அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்’’ என இரண்டு போஸ்டர்கள் செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜய் மக்கள் இயக்க சார்பாக தமிழகம் முழுவதும் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை விஜய் அழைத்து பாராட்டியது மற்றும் ஜுன் மாதம் 234 தொகுதியில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 2 கோடி ரூபாய் செலவில் நல திட்டங்களை வழங்கபட்டது.
இந்நிகழ்வு நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குதற்கு முன்னுதாரணமாக பார்க்கப்பட்டது. இப்போது விஜய் ரசிகர்கள் போஸ்டர் மூலம் விஜயை அரசியலுக்கு அழைத்திருப்பது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பாரா என மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜயை ரசிகர்கள் அரசியலுக்கு வர எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்