திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி வேளாண்மை துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாய குறைதீர்வு கூட்டம் ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் ஆரணி சுற்றி வட்டார பகுதியில் உள்ள விசவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த தலைவர் மூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓன்றுணைந்து திடிரென அதிகாரிகளை கண்டித்து விவசாயம் சம்மந்தபட்ட பிரச்சகைகளுக்கு அதிகாரிகளிடம் கொடுக்கும் மனுவிற்கு இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காதில் பூவைத்து அதிகாரிகளிடம் கொடுக்கும் மனு விவசாயி காதில் பூ சுத்துவது போல் உள்ளதாக கூறி விவசாய கூட்டத்தை புறக்கணித்து விட்டு அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.