ஆரணியில் பாஜகவினர் கொடி கம்பத்தை தர மறுத்த போலீசாரை கண்டித்துடி.எஸ்.பி அலுவலகம் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆரணியில் பாஜகவினர் கொடி கம்பத்தை தர மறுத்த போலீசாரை கண்டித்துடி.எஸ்.பி அலுவலகம் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆரணியில் பாஜகவினர் கொடி கம்பத்தை தர மறுத்த போலீசாரை கண்டித்து
டி.எஸ்.பி அலுவலகம் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்
ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனூர் லாடவரம் மைனந்தல் உள்ளிட்ட
10கிராமங்களில் பாரதீய ஜனதா கட்சி கொடி கம்பம் ஏற்றுவதற்கு மண்டல
செயலாளர் குணாநிதி அனுமதி கடிதம் போலீசிடம் வழங்கியுள்ளார்.

மேலும் அப்போது போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கபட்டு இன்று காலையில்
பாரதீயஜனதா கட்சி கொடி கம்பத்தை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ்
ஸ்டேஷனில் வைக்கபட்டன.

இதனால் பாரதீய ஜனதா கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை
தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஓன்றுணைந்து ஆரணி டி.எஸ்.பி
அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.பி ரவிசந்திரன் (பொறுப்பு ) என்பவரிடம்
பேச்சுவார்த்தை நடத்தி கொடிகம்பத்தை தர கோரி கேரிக்கை வைத்தனர்.

மேலும் போலீசார் கொடி கம்பத்தை தரமறுத்த காரணத்தினால் டி.எஸ்.பி அலுவலக
வளாகத்தில் மாவட்ட தலைவர் சி.ஏழுமலை தலைமையில் கட்சியினர் திடிரென
கோஷங்கள் எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து
செல்லுமாறும் உயர் அதிகாரிகளிடம் பேசி கட்சி கொடி கம்பத்தை தருவதற்கு
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

இதனால்
டி.எஸ்.பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரபாக காணப்பட்டது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..