திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் திருமலை சமுத்திர ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கொண்டது. இந்த ஏரியிலிருந்து ஆரணி சுற்றியுள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கொண்ட விவசாய நிலத்திற்கு நீர் ஆதாரமாக அமைந்துள்ளன.
மேலும் கடந்த வாரம் திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெஞ்சன் புயல் காரணமாக பலத்த கன மழை பெய்தது இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட ஏரிகளில் கொள்ளளவு எட்டியது.
மேலும் தற்போது பெய்து வரும் கனமழையால் ஆரணி டவுன் திருமலை சமுத்திர ஏரி முழு கொள்ளளவு எட்டியது.
இதனால் கொசப்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நகரமன்ற உறுப்பினர்கள் கிருபாசமுத்திரி சதிஷ், சசிகலா சேகர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் ஏ.சி மணி பங்கேற்றார்.
மேலும் கொசப்பாiளையம் பெருமாள் கோவிலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக பட்டுபுடவை மஞ்சள், குங்குமம், மலர் மாலை ஆகிய சீர்வரிசையுடன் சுமந்து சென்று ஏரி நீரில் பட்டுபுடவை வைத்து மலர் தூவி வரவேற்றனர்.
இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ராமு ஓன்றிய செயலாளர்கள் மோகன் துரை.மாமது மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பொதுமக்கள்ள திரளாக பங்கேற்றனர்.