ஆரணி அதிமுகவில் இரண்டு கோஷ்டிகளாக ஆரணியில் செயல்பட்டு வருகின்றனர் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் ஓரணியாகவும் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொருளாளர் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.. இதனால் அதிமுக நிகழ்ச்சிகளின் போது இரண்டு அணிகளுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் வாக்குவாதம் இன சில மாதங்களாக ஏற்பட்டு வருகின்றது..
இதனால் அதிமுக நிகழ்ச்சிகள் நடைபெறும் போதெல்லாம் அதிமுக தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் முகம் சுளித்தபடி செல்கின்றனர்..
இந்நிலையில் இன்று ஆரணியில் அண்ணா 115 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் சென்னைக்கு சென்று விட்டதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்ற அதிமுக உறுப்பினர்கள் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்ட பொறுப்பாளர்கள் என ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்…

சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாததால் மற்ற அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாக சந்தோஷமாக விழாவை கொண்டாடினர்….
இதைப் பற்றி நமது நிருபர் அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர்…
ஆரணியில் அதிமுகவில் இரண்டு கோஷ்டி மோதல் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது…