ஆரணி அருகே ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் பெருமாள் ஆலயத்தில் உற்வச பெருவிழா

ஆரணி அருகே ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் பெருமாள் ஆலயத்தில் உற்வச பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஆலயமாக ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் ஆலயமாக விளங்கி வருகின்றன. இந்த ஆலயம் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 300 அடி மலை உச்சி மீது அமைந்துள்ளன.

மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாக வாய் பேச முடியாத குழந்தைகள் பிரதி சனிக்கிழமை 3 வாரம் தொடர்ந்து 3 முறை இந்த ஆலயத்திற்கு சென்று பெருமாளை வணங்கி தீர்த்தம் பெற்று வாய் பேசாத குழந்தைகள் நிச்சியம் வாய் பேச முடியும் என்று பக்தர்கள் ஐதீகமாக உள்ளன.

மேலும் வாரம் வாரம் வாய் பேச முடியாத வெளிமாநில மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களின் குழந்தைகளை உத்தமராயர் ஆலயத்திற்கு அழைத்து வந்து நேர்த்தி கடனாக குழந்தைகளுக்கு துளசி மாலை அணிந்து அரிசி மா விளக்கு ஏற்றி ஆலயத்தில் குழந்தைகள் அதனை சுமந்து வீதிஉலா வந்தனர்.

மேலும் வருடா வருடம் தை முதல் வாரத்தில் தை மகர உற்சவ பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்தாண்டு தை மகர உற்சவ பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அதிகாலையில் உத்தமராயருக்கு அபிஷேகம் மற்றும் ஸ்ரீ தேவி பூ தேவி உற்சவ பெருமாள் அலங்கரிக்கபட்டு வீதிஉலா நடைபெற்றது.

இதனை கண்டு களிக்க வெளிமாவட்டத்திலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தமராய பெருமாளை வணங்கி வழிபட்டனர்…

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..