ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாடி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் ரூ.4லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது..
“ இந்த கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தறமற்ற முறையில் நடைபெறுவதாக அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பணியை தரத்தை பரிசோதித்து தனது கையால் கால்வாய் சிமெண்ட் கால்வாய் எடுத்து காண்பிக்கும் வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகியது..
“அதிகாரிகள் நேரில் ஆய்வு”
இதனையொடுத்து இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைத்து கழிவுநீர் கால்வாய் பணிகள் தரத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆய்வில் கால்வாய் பணிகள் தரமான முறையில் உள்ளதகாவும் தரமற்ற முறையில் கால்வாய் பணி நடைபெறுவதாக சமூக வளைதலங்களில் வீடியோ பதிவிட்ட நபர் யார் என்றும் கலவை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த விமல் என்பதும் நாம் தமிழர் கட்சி சேர்ந்தவர் என தெரிய வந்தன. தவறான முறையில் வீடியோ வெளியிட கூடாது என்று போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கலவை பகுதியில் தரமற்ற முறையில் கால்வாய் பணி நடைபெற்று வருவதாக சமூக வளைதலங்களில் வைரலான வீடியோ சம்பவம் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.