ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கஞ்சாவை பிரிப்பதில் ஏற்பட்ட சண்டையால் எழுந்த முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து மதுபாட்டீலில் மண்ணெண்ணெய் நிரப்பி தன்னை தாக்கிய நபரின் வீட்டிற்கு அருகில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அருகே கஸ்பா கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் தாமு (எ) விக்னேஷ் இவருக்கும் லேபர் காலனி பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவருக்கும் இடையே கஞ்சா பிரிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் வாய் தகராறு ஏற்பட்டு இருதரப்பினர் தாக்கி கொண்டதாக கூறப்படுகின்றன.
இதில் காயமடைந்த தாமு (எ) விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மதுபோதையில் இருந்த விக்னேஷ் தன்னை தாக்கிய அகஸ்டின் என்பவரது வீட்டிற்கு அருகே குவாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி அதனைப் தீயிட்டு கொளுத்தி வீசியதாகவும் ஆனால் மண்ணெண்ணெய் குண்டு வீட்டின் முன்பு விழுந்த போது எரியவில்லை என்பதால் பெரிய சேதாரம் தவிர்க்கபட்டன.
இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டடு வீட்டின் அருகே கிடந்த மதுபாட்டீல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து ஆற்காடு கஸ்பா பகுதி சேர்ந்த மதன்குமார்(22) கணேஷ்குமார் (22) ஆகிய 2பேரை கைது செய்து முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி விக்னேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்…
செய்தியாளர் மு.அசோக்