திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியாக கடந்த 2009ம் ஆண்டு உருவாக்கபட்டது.
இதில் ஆரணி போளுர் செய்யார் வந்தவாசி செஞ்சி மயிலம் உள்ளிட்ட 6சட்டமன்ற தொகுதிகளை உள்ளிடக்கியுள்ளன.
மேலும் இதில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 76ஆயிரத்து 930 வாக்காளர்களும் செய்யார் சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 60ஆயிரத்து 491 வாக்காளர்களும் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 44ஆயிரத்து 113 வாக்காளர்களும் போளுர் சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 41ஆயிரத்து 676 வாக்காளர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 54 ஆயிரத்து 442 வாக்காளர்களும் மைலம் சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 12ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளிட்ட 6 தொகுதியில் 14லட்சத்து 90ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர்.
புதியதாக உருவாக்கபட்ட ஆரணி நாடாளுமன்ற தொகுதி
மேலும் 2009ல் புதியதாக உருவாக்கபட்ட ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த செஞ்சி சேவல் ஏழுமலையும் 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றார்.
2024 தேர்தல் களம்
தற்போது திமுக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக நேரடியாக களம் இறங்குவதால் திமுகவினர் உற்சாக காணப்படுகின்றனர். திமுகவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தனுக்கு திமுக தலைமை சீட்டு வழங்கியுள்ளதாலும் கட்சியினர் மேலும் குஷியாக உள்ளனர். ப வைட்டமின் அதிகளவில் புரளும் என்பதாலும் திமுகவிற்கே தொகுதியை காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளதாலும் ஆரணிக்கு வந்த வேட்பாளர் தரணிவேந்தனுக்கு கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும் காந்தி ரோடு காமராஜர் சிலை அருகில் கட்சி அலுவலகம் படுவேகமாக இடத்தினை ஆய்வு செய்து அலுவலகம் திறக்க முழு வீச்சில் கட்சியினர் இறங்கியுள்ளனர்.
ஆளுங்கட்சி பலமும் எதிர்கட்சியினர் பிரிந்து இருப்பதும் திமுகவிற்கு சற்று பலமாக உள்ளன.
இதனையொடுத்து அதிமுக சார்பில் ஆரணி ஓன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் வேட்பாளராக அறிவித்துள்ளன. நேற்று ஆரணியில் நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து ஊர்வலமாக உற்சமாக கொண்டாடினார்கள்
இதனால் ஆரணியில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளன. திமுக அதிமுக ஆகியோர் தற்போது கூட்டணி கட்சியினர் மூத்த நிர்வாகிகளை போட்டி போட்டு கொண்டு நேரில் சென்று ஆதரவு திரட்டி வருவதால் ஓருசில தினங்களில் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சார வேட்டையில் ஈடுபட உள்ளதால் தேர்தல் களம் வெயிலை விட சூடுபிடிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு?