ஆரணியில் தொடரும் குற்ற சம்பவம்ரூம் போட்டு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளன.

ஆரணியில் தொடரும் குற்ற சம்பவம்ரூம் போட்டு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளன.

ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக விநாயகமூர்த்தியும் சப்-இன்ஸ்பெக்டராக சுந்தரேசன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கிரு~;ணமூர்த்தி  உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஆரணி டவுன் பகுதியில் குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கஞ்சா போதை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் இதனால் இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர்.

இது மட்டுமின்றி ஆரணி டவுன் பெரியார் நகர் மணியம்மை பகுதியை சேர்ந்த ஜமால்பா~h (64) இவருடைய 2வது மகள் மனீ~h ஆரணி பள்ளிகூடத் தெருவை சேர்ந்த மன்சூர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருவதும் இதனால் கோபித்து கொண்டு தந்தை வீட்டிற்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் மனி~h வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தி வராத காரணத்தினால் இதற்கு காரணம் தனது மாமனார் ஜமால்பா~h என கூறி தூங்கி கொண்டிருந்தவரை தலையில் அம்மை கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் ஆரணி டவுன் போலீசார் மன்சூரை கைது செய்தனர்.

அதே போல ஆரணியில் பட்டு மளிகையில் பெரியசாயக்கார தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பார்த்தீபன் ஆகியோர் ஓன்றாக வேலை செய்துள்ளனர். வேலை சம்மந்தமாக இருவருக்கும் விரோதம் உள்ளன. இதில் ராஜமாணிக்கம் குடிபோதைக்கு அடிமையானதால் பட்டு மளிகை உரிமையாளர் பணியில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றன. ன்னை வேலையிலிருந்து நீக்கியதற்கு உடன் வேலை செய்த பார்த்தீபன் தான் காரணம் என்று சில தினங்களுக்கு முன்பு ஆரணி டவுன் கோட்டை மைதானம் அரசு கருவூலம் அலுவலகம் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்த பார்த்தீபனை குடிபோதையில் இருந்த ராஜாமாணிக்கம் அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டு கீழே விழுந்த ராஜமாணிக்கம் பின் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த ராஜமாணிக்கம் சிகிச்சைக்காக ஆரணி மற்றும் வேலூர் அனுமதித்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதே போல ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது..
இந்நிலையில் ஆரணி டவுன் குப்பன்  தெருவில்  கடந்த ஜனவரி மாதம் சுபா~; என்பவரின்  வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இருசக்கர வாகனத்தை இரவு நேரத்தில் டவுசர் அணிந்த சில இளைஞர்கள் திருடி சென்றுள்ளனர்..
மேலும் சுபா~; காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்..

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதனால் கடுப்படைந்த சுபா~; ஆரணியில் முக்கிய வீதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பல்வேறு இடங்களில் சென்று இருசக்கர வாகனங்களை தேடி உள்ளார்..
மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு யார் எங்கிருந்து வந்தார்கள் என்பதை சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்துள்ளார். அப்போது சில இளைஞர்கள் ஆரணியில் ரூம் போட்டு இருசக்கர வாகனங்களை திருட வந்தது தெரிய வந்தது..

இதுகுறித்து சுபா~; ஆரணி நகர காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார் ஆனால் காவலர்கள் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது…

ஆரணியில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது ரூம் போட்டு சிறுவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதே போல ஆரணி டவுன் பகுதியில் தொடர் குற்றசம்பவம் நடைபெற்று வருவதால் போலீசார் முற்றுபுள்ளி வைப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு? 

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..