ஆரணி அருகே வீட்டிற்கு பெயிண்ட் வாங்க ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில்கொண்டு சென்ற நாடக கலைஞரிடம் 1.50லட்சம் ரூபாய் பறக்கும் படையினர்பறிமுதல் செய்தனர்…

ஆரணி அருகே வீட்டிற்கு பெயிண்ட் வாங்க ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில்கொண்டு சென்ற நாடக கலைஞரிடம் 1.50லட்சம் ரூபாய் பறக்கும் படையினர்பறிமுதல் செய்தனர்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பனையூர் கூட்ரோடு அருகே தேர்தல்
பறக்கும் படை அதிகாரி தீபிகா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பெண்ணகர் பகுதியை சேர்ந்த நாடக கலைஞர் தேவன் என்பவர் தனது
இருசக்கர வாகனத்தில் ஆரணிக்கு தனது வீட்டிற்கு பெயிண்ட் வாங்குவதற்கு
வரும் வழியில் இருசக்கர வாகனத்தை பறக்கும் படையினர் மடக்கி சோதனை
செய்தனர். இதில் உரிய ஆவணமின்றி சுமார் 1.50லட்சம் ரூபாய் பணம் வைத்துள்ளதால்
பணத்தை பறிமுதல் செய்து ஆரணி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஓப்படைத்தனர்.

பின்னர் 1.50லட்சம் ரூபாயை சீல் வைத்து திருவண்ணாமலை கருவூரூல
அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..