ஆரணி அருகே கருமாரியம்மன் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்தை செய்யப்பட்டதை வீடியோ காணொளி காட்சி மூலம் கண்டு மகிழ்ந்த கிராம பொதுமக்கள்..

ஆரணி அருகே கருமாரியம்மன் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்தை செய்யப்பட்டதை வீடியோ காணொளி காட்சி மூலம் கண்டு மகிழ்ந்த கிராம பொதுமக்கள்..

ராமர் சிலை பிரதிஷ்டை ஆரணி அருகே கருமாரியம்மன் கோவிலை தூய்மை செய்து ராமர் பிரிஷ்டிதையை வீடியோ காணொலி காட்சியை மூலம் கிராம பொதுமக்கள் கண்டுகளிப்பு.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு நலதிட்ட பிரிவு மாநில செயலாளர் பங்கேற்பு.

அயோத்தியில் 500 ஆண்டுகள் பழமையான ராமர் கோவிலில் இன்று புதிதாக ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்குளம் பூண்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே உள்ள கோவில்களில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழா சிலை பிரதிஷ்டை ஆகியவற்றை இந்தியா முழுவதிலும் உள்ள ஊர்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற ஆரணி தெற்கு மண்டலத்தை சேர்ந்த கரிப்பூர் கிராமத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை.வ.சங்கர் தலைமையில் கரிப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கருமாரியம்மன் கோவிலை தூய்மை செய்து அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவினுடைய வீடியோ காணொலி நேரடி காட்சி கிராம பொதுமக்களும் ஆன்மீக பக்தர்களும் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்..

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் அலமேலு மகளிர் அணி பொதுச் செயலாளர் அமுதா ஐ.டி பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், கேசவன், கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர்கள் திருமால், ராஜசேகர், விஜி, விக்னேஷ், ஏழுமலை, செல்வராஜ், நாராயணன் மகளிர் அணி தேன்மொழி தஞ்சியம்மாள், சௌமியா, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்…

இறுதியில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..