திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி ஆரணி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் சப்த கண்ணி ஆலயத்தில் கிளைத் தலைவர் பாண்டியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல தலைவர் குணாநிதி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் கலந்து கொண்டார்..
மேலும் சைதை வ.சங்கர் பேசுகையில் பிரதமர் உடைய நலத்திட்டங்களை பற்றி விளக்கூறை ஆற்றினார் மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் எப்படி எல்லாம் எதிர்கொள்வது என்று ஆலோசனை வழங்கினார்..
சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட ஆதனூர் கிராமத்தில் அதிக அளவில் வாக்குகளை எப்படி பெறுவது என்றும் அவர் எடுத்துரைத்தார்..
பின்னர் நிகழ்ச்சி நிறைவாக வேலூர் உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் நன்றி உரையாற்றினார்..
மேலும் ஒன்றிய செயலாளர் சுதாகர் ஓ பி சி அணி மண்டல தலைவர் சுசேந்திரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.