ஆரணியில் பைக் ரேசில் ஈடுபட்டு சாகசம் செய்து அதனை இன்ஸ்டரகாமில்வீடியோவை பதிவிட்ட 4 வாலிபர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து பைக் ரேசில்ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆரணியில் பைக் ரேசில் ஈடுபட்டு சாகசம் செய்து அதனை இன்ஸ்டரகாமில்வீடியோவை பதிவிட்ட 4 வாலிபர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து பைக் ரேசில்ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆரணியில் பைக் ரேசில் ஈடுபட்டு சாகசம் செய்து அதனை இன்ஸ்டரகாமில்
வீடியோவை பதிவிட்ட 4 வாலிபர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து பைக் ரேசில்
ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விழுப்புரம் ஆரணி நெடுஞ்சாலை
திருவண்ணாமலை ஆரணி சாலை சென்னை ஆரணி சாலை வேலூர் ஆரணி ஆகிய 4 சாலைகளில்
4வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு பைக் பின்சீட்டில் பெண்ணை உட்கார
வைத்து சாகசத்தில் ஈடுபட்டு அதனை தங்களது இன்ஸ்ரகாமில் வீடியோவை
பதிவிட்டுள்ளனர்.

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார்
அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களை ஆரணி டி.எஸ்.பி
ரவிசந்திரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு குடியாத்தம்
பள்ளி கொண்டாவை சேர்ந்த சக்திவேல் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த சபரி
ரகுராம், வேல்முருகன், ஆகியோர் என்பது தெரிய வந்தன.

இதனையொடுத்து பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டவர்களின் 4 பைக்குகளை
ஆரணி தாலுக்கா போலீசார் பறிமுதல் செய்து அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்
அச்சுறுத்தல் உள்ளிட்ட 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான
4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆரணியில் 4 வாலிபர்கள் மற்றும் பெண் ஓருவர் பைக் ரேசில் ஈடுபட்டு இதனை
தனது இன்ஸ்டராகாமில் வீடியோவை பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..