திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை கல்லாத்துர் ஊராட்சிக்குபட்ட துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி காளி மல்லிகா தம்பதியினருக்கு ஸ்ரீபதி சரண்யா என்ற 2மகளும் ஜெயசூர்யா என்ற மகனும் உள்ளனர். இதில் ஸ்ரீபதி என்ற பெண்ணுக்கு புலியூர் கிராமத்தை சேர்ந்த 108 ஆம்பூலன்ஸ் டிரைவர் வெங்கட்ராமன் ஆகியோருக்கு திருமணமாகியும் படிப்பில் ஆர்வத்துடன் இருந்த காரணத்தினால் ஸ்ரீ பதி(23) டாக்டர் அப்பேத்கர் சட்ட கல்லூரியில் தமிழ்வழி கல்வி படிப்பில் பி.ஏ.பி.எல். சட்டபடிப்பு பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என.;ப.pஎஸ்.சி சிவில் நீதிபதி தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி தனது பிரசவ தேதியும் தேர்வும் ஓரே நாளில் வந்துள்ளதை கண்டு சற்றும் தயங்காமல் தேர்வுக்கு 2நாட்களுக்கு முன்பு சுகபிரசவரத்தில் ஸ்ரீபதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளன.
இதனையொடுத்து தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீ பதி தனது கணவர் வெங்கட்ராமன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் பிரசவமாகி 2வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான டி.என.;பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீ பதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இது குறித்து ஐவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தனது சமூகவளைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி “பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி ஸ்ரீ பதி எனவும் ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று, பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று மலையும், மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீ பதியைப் பாராட்டிப் போற்றி வருகின்றனர்.
மேலும் பிரசவ வலியோடு மருத்துவரின் ஆலோசனைப்படி கேட்டு மனவலிமையுடன் தேர்வு தயாராகி தேர்வில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். பழங்குடி மக்களில் சிவில் தேர்வில் முதல் பெண் என்ற பெருமையும் மற்றவர்களுக்கு சாதிக்க பெண் நீதிபதி ஸ்ரீபதி எடுத்துகாட்டாக உள்ளார்.