ஆரணி டவுன் கொசப்பாளையம் ஸ்ரீ அலர்மேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீ கில்லா சீனிவாச பெருமாள் பழமை வாய்ந்த ஆலயம் இருந்து வருகிறது இந்த ஆலயத்தின் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கமாகும்
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 17ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது தினந்தோறும் பகல் பல்லாக்கு இரவு பெரிய கருட சேவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது
8ம் நாளான இன்று ஸ்ரீ கில்லா சீனிவாச பெருமாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் சுந்தர் துரைமாவது மோகன் ஒன்றய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் மாவட்ட பொருளாளர் தக்ஷிணாமூர்த்தி நகர மன்ற உறுப்பினர்கள் மருதேவி பொன்னையன் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்தனர் அதிமுக நிர்வாகிகள் நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு நகரச் செயலாளர் அசோக்குமார் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் நகர மாணவரணி செயலாளர் குமரன் தகவல் தொழில்நுட்ப அணி சரவணன் ஆகிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்