திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சியை திமுக நகரசெயலாளராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து அரசு ஓப்பந்ததாராக கட்டுமானபணிகள் எடுத்து கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பணிகளை மேற்கொண்டுவருகின்றார்.
மேலும் களம்பூர் பேரூராட்சி அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் உள்ளஆதிதிராவிடர் பகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் நிதியிலிருந்து சிமெண்ட்சாலை மற்றும் கல்வெட்டு அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
மேலும் இதனை திமுக நகர செயலாளர் வெங்கடேசன் கடந்த சில மாதங்களுக்குமுன்பு ஒப்பந்தம் எடுத்துள்ளார்.ஆனால் கிராமத்திற்கு போட வேண்டியசிமெண்ட் சாலையை களம்பூர் பேரூராட்சிக்குபட்ட 15வது வார்டில் உள்ள தனதுசொந்த அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் சுமார் 150 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலையை அமைத்துள்ளார்.
பின்னர் களம்பூர் பேரூராட்சிக்கு 15வது வார்டு பகுதியில் உள்ள இடத்தில்ஏந்துவாம்பாடி காலனி பகுதி என்று கல்வெட்டும் பட்டபகலில் வைத்துள்ளதைகண்டு ஏந்துவாம்பாடி காலனி மற்றும் களம்பூரில் உள்ள பொதுமக்கள் கண்டுஅதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது சம்மந்தமாக ஏந்துவாம்பாடி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் இது பற்றி கேட்டதற்கு : ஏந்துவாம்பாடி காலனி பகுதிக்குஒதுக்கபட்ட நிதி ஆனால் ஓப்பந்ததாரர் தனது அரிசி ஆலைக்கு சிமெண்ட் சாலைஅமைத்து கொண்டார்.
இது சம்மந்தமாக கேட்டதற்கு ஓப்பந்ததாரர் சரிவர பதிலளிக்கவில்லை என ஒரேவரியில் குற்றசாட்டினார்.இதனையடுத்து இது சம்மந்தமாக ஏந்துவாம்பாடி காலனி பொதுமக்கள் சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் திமுகவை சேர்ந்த ஓப்பந்ததாரர் என்பதாலும் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளராக இந்த பகுதியில் திகழ்ந்து கொண்டு வலம் வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறப்படுகின்றன. இதனால் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று
ஏந்துவாம்பாடி கிராமத்தில் மாவட்ட குழு உறுப்பினர் நிதியிலிருந்து காலனி பகுதிக்கு ஒதுக்கிய நிதியை முறைகேடாக தனது சொந்த அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் சிமெண்ட் சாலையை அமைத்த நபர் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்தும் காலனி பகுதிக்கு மீண்டும் நிதியை ஓதுக்கி சிமெண்ட் சாலை மற்றும் பக்க கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று ஏந்தும்வாடி கிராமத்தின் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக முறைகேடாக சாலையை அமைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் காலனி பகுதிக்கு நிதி ஒதுக்கி திட்ட பணிகள் நடைபெற வேண்டும் இல்லையென்றால் கிராம பொதுமக்களை திரட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர்.