திருவண்ணாமலை மாவட்டம் தொப்பனந்தல் கிராமத்தைச் சார்ந்த குழந்தை கவுண்டர் இவரது வயது 97 ஆகும் இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார் இவர்களுக்கு ஜெயவேலு ராமமூர்த்தி என்று இரண்டு மகன்கள் உள்ளனர் முதல் மகன் ஜெயவேலு வனத்துறையில் பணியாற்றி விட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார் இரண்டாவது மகன் ராமமூர்த்தி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்
முதியவர் குழந்தை கவுண்டர் என்பவர் சுயமாக சம்பாரித்து கேட்வரம்பாளையம் கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூன்று ஏக்கர் விவசாய நிலத்தினை இரண்டு மகன்களின் பேர குழந்தைகள் மீது தலா 1.5 ஏக்கர் நிலத்தினை உயில் எழுதி வைத்துள்ளார்
அதன் பிறகு இரண்டு மகன்களும் முதியவர் கொடுத்த விளை நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர் ஆனால் இரண்டு மகன்களும் முதியவருக்கு சாப்பாடு போடாமலும் தங்க இடம் தராமலும் முதியவரை விரட்டி அனுப்பி உள்ளனர்
இதனால் முதியவர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் உறவினர் வீடுகளில் சென்று வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் முதியவர் குழந்தை கவுண்டர் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்
அந்த மனுவில் எனக்கு 97 வயது ஆகிறது வயதான காலத்தில் என்னுடைய சொத்தினை அபகரித்து எழுதிக்கொண்டு என்னை பராமரிக்காமல் விட்டு விட்டார்கள் நான் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் உள்ளேன் எனக்கு யாரும் சாப்பாடு போடுவதில்லை என்னை யாரும் பராமரிக்காமல் அனாதையாக விட்டு விட்டார்கள் எனவே எனது பிள்ளைகளின் வாரிசுகளுக்கு எழுதி வைத்த நிலத்தின் பத்திரத்தை ரத்து செய்து என் பெயருக்கு மாற்றி தருமாறு ஆரணி கோட்டாட்சியருக்கு மனு மனு கொடுத்துள்ளார்
அரசு பணியில் உள்ள இரு மகன்களும் அனாதையாக விட்டுவிட்டார்கள் என்று 97 வயதில் ஆரணி கோட்டாட்சியரிடம் முதியவர் மனு அளித்திருப்பது அனைவருடைய சோகத்தை உருவாக்கி உள்ளது