திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உலக பிரசித்தி பெற்ற படைவீடு ஸ்ரீ. ரேணுகாம்பாள் ஆலயத்தில் நேற்று 6.வது ஆடி வெள்ளி விழா முன்னிட்டு மூலவருக்கும் மற்றும் பரிவார மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..
மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து ஆடு கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை தரிசனம் செய்தனர் .மேலும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கமண்டல நாக நதி ஆற்றில் ரேணுகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.
மேலும் முன்னதாக 6 வது ஆடி வெள்ளி விழா முன்னிட்டு உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மலர்களால் அலங்காரத்தில் புஷ்ப பல்லாக்கு ஜோடிக்குப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆற்றுப்பகுதியில் இருந்து முக்கிய வீதி வழியாக திருக்கோயில் வரை திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…
செய்தியாளர் ராஜசேகர்.