திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகே ஜவ்வாதுமலை ஓன்றியம் கானமலை ஊராட்சிக்குபட்ட எலந்தபட்டு கிராமத்தில் சுமார் 200க்கும் குடும்பத்தினரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்..
மேலும் இந்த கிராமத்தில் விவசாயம் கூலி தொழில் மேஸ்திரி வேலை உள்ளிட்ட பணிகளை மலைவாழ் மக்கள் செய்து வருகின்றனர். காய்கறி அரிசி உணவு அத்தியாவச பொருட்களை வாங்கவதற்கு சுமார் 8கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியிலிருந்து கால் நடையாக அல்லது இருசக்கர வாகனத்தில் சென்று வருவதாகவும் மலைவாழ் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தியா சுதந்திரமடைந்து 70ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில்
கானமலை ஊராட்சி எலந்தபட்டு கிராமத்திற்கு சாலை வசதியில்லை 4 தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாகவும் பலமுறை தமிழக அரசிடம் சாலை வசதி குடிநீர் வசதி மருத்துவ வசதி செய்து தர கோரியும் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.. இந்நிலையில் கடந்த சில தினங்களாக எலந்தபட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பூச்சியப்பன் சாந்தி (29) தம்பதியினருக்கு சிவரஞ்சனி(13 ) ரேகா (10) ரேவதி (7) சிவான்யா (2) ஆகிய 4பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக சாந்தி வயிற்று வலியால் பாதிக்கபட்டு சிகிச்சை
பெற்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலியால் துடித்த சாந்தி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
மேலும் சாந்தியின் சடலத்தை வேலூர் அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி வாகனம் மூலம் சொந்த கிராமத்திற்கு கொண்டு வர முயன்றனர். திடிரென படவேடு கோட்டை மலை அடிவாரத்தில் சடலத்தை இறக்கி வைத்து சாலை வசதியில்லாத காரணத்தினால் சடலத்தை வழியில் வைத்துவிட்டு அமரர் ஊர்தி சென்றன.
இதனையொடுத்து எலந்தபட்டு கிராம பொதுமக்கள் ஓன்றுணைந்து சாந்தியின் சடலத்தை முன்பு அமர்ந்து கதறி அழுதனர். இறந்த சாந்தியின் 4 பெண் குழந்தைகள் கதறியது பார்ப்போரின் நெஞ்சை உருகியது. .

மேலும் இறந்த சாந்தியின் சடலத்தை டோலி மூலம் கட்டி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரையில் தோலில் சுமந்தவாறு சென்றனர். இந்தியா சுதந்திரமடைந்தும் எங்களுக்கு சாலை வசதியின்றி வாழ்ந்து வருவது அடிமைதனமாக வாழ்ந்து வருவதாக கண்ணீர் மல்க மலைவாழ் பொதுமக்கள் தெரிவித்தனர்…
செய்தியாளர் ஏ.பசுபதி