ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசாத் வரவேற்பு அளித்தனர் மாவட்ட தலைவர் அரக்கோணம் முஹம்மது அலி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் A.O.இம்ரானுஹத், தமுமுக மாவட்ட செயலாளர் பூட்டு இர்ஃபான், பொருளாளர் கலவை கிஷோர் ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை பொறுப்பு வகித்தனர் மாநில அமைப்பு செயலாளர் புதுமடம் ஹீலீம் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை நிகழ்த்தினார்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் அதேபோல் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் போதையில் தமிழகம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு நடைமுறைப்படுத்து.. நடைமுறைப்படுத்து.. பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்து என தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக மனிதனை மக்கள் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்பு தொழுகை ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தல தொடங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பனப்பாக்கம் ரஹீம், ரகுமான் ஷரீஃப், முகமது இலியாஸ், ஜிபேர் அஹமத், தூர் முகமது, மௌலவி ஆஷித் இலாஹி, கல்மேல்குப்பம் அப்துல் வாஜீத், நகர கழக செயலாளர்கள் அயாஸ் அஹமத், முபாரக், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் இலியாஸ் நன்றி உரை கூறினார்..
ராணிப்பேட்டை செய்தியாளர் அருள்அரசன்