ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமம் ஈ.பி.நகர் பகுதி யைச் சேர்ந்தவர்கள்வேதபுரி,சிந்தாமணி தம்பதியினர். இவர்களுக்கு சேகர், பாபு, குணாளன், ராஜா, அன்பு ஆகிய 5 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வேதபுரி சாலை விபத்தில் இறந்துவிட்டார் ஈ.பி நகர் பகுதியில் மூதாட்டி சிந்தாமணி(வயது 75) தனியாகஒரு வீட்டில் வசித்து வந்தார்.
மூதாட்டி சிந்தாமணியின் மூத்த மகனான சேகர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகபணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். இவருக்கு மதுமதி என்கின்ற ஒரு மகள் உள்ளார். சேகர் மதுமதியை காஞ்சிபுரத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் மதுமதி காஞ்சிபுரத்தில் தனது கணவருடன் வாழாமல் வேலூரில் தனது தந்தையான சேகர் இல்லத்தில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் மதுமதிக்கும் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கவின் என்பவருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் நட்பு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசமாக வாழ விரும்பி உள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 11 ம் தேதி ஆரணி அருகே ஈ.பி நகர் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி சிந்தாமணி வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பக்கத்து வீட்டில் சிந்தாமணியின் உறவினர் சன்மதி மூதாட்டிக்கு உணவு கொடுப்பதற்காக வந்தபோது மூதாட்டி சிந்தாமணி மயங்கி இருந்ததை பார்த்து சன்மதி உடனடியாக அக்கம்பக்கத்திரை அழைத்து மூதாட்டியை உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்க முடியாததால் மேல் சிகிச்சைக்காக மூதாட்டி வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மூதாட்டி சிந்தாமணி 17ம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆரணி கிராமிய காவல்துறையினர் இதனை சந்தேகத்துக்குரிய மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மூதாட்டியின் உறவினர்கள் மூதாட்டியை அடக்கம் செய்துவிட்டு வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி அணிந்திருந்த தங்கநகை மற்றும் வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன.
இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல்துறையினர், மூதாட்டியின் உறவினர்களை தனித்தனியாக விசாரித்த போது மூதாட்டியின் மூத்த மகனான ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சேகரின் மகள் மதுமதி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் மதுமதியை விசாரிக்க சென்றபோது மதுமதி தலைமறைவு ஆகிவிட்டார்.
பின்னர் இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக மதுமதியை தேடி வந்தனர். அப்பொழுது மதுமதிக்கும் சென்னை கொளத்தூரை சேர்ந்த கவின் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் தீவிரமாக மதுமதி மற்றும் அவரது கள்ளக்காதலன் கவின் ஆகிய இருவரும் 25 நாட்கள் போலீஸிடம் சிக்காமல் கேரளா, பெங்களூர், கோவா, மும்பை போன்ற நகரங்களுக்கு வாடகை கார் மூலம் உல்லாசமாக சுற்றி கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு காவல் துறையினருக்கு சவாலாக அமைந்தது. இதனால் ஆரணி டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் என்பவரை பணி மாற்றம் செய்துவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த பாண்டீஸ்வரி (வயது 29) இளம் வயதில் முதல் போஸ்டிங்) டிஎஸ்பியாக போடப்பட்டு அவர் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜாங்கம், விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தும் அவர்களைப் பிடிக்க முடியாததால் ஆங்காங்கே வால்போஸ்டர்கள் ஒட்டபட்டு 2 நபர்கள் இருக்கும் இடத்தை தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டு இருந்தது .
இந்நிலையில் அந்த கள்ளக்காதலர்கள் பயன்படுத்திய வாடகை கார் எண்ணை வைத்து காவல் துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. பாண்டிச்சேரியில் ஒரு தனியார் விடுதியில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்து அவர்களை கைது செய்து ஆரணிக்கு கொண்டு வந்தனர்.
மேலும் போலீசார் மதுமதி கள்ளக்காதலன் கவின் ஆகியோரிடம் விசாரணை செய்த போது சமூக வலைதளங்களால் ஏற்பட்ட கள்ளக்காதலால் இருவரும் ஒன்று சேர்ந்து உல்லாசமாக வாழ்வதற்கு பணம் தேவை இருப்பதால் நவம்பர் 11 ம் தேதி ஆரணியில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி விட்டு மதுமதி மட்டும் பாட்டி சிந்தாமணி வீட்டிற்கு சென்று பாட்டி சிந்தாமணியை பின்பக்கமாக கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு மூதாட்டி மயங்கிய நிலையில் அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு மதுமதியும் கள்ளக்காதலன் கவினும் அங்கிருந்து தப்பி சென்றதாக விசாரணையில் தெரிவித்தனர்.
மதுமதியின் தந்தை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் என்பதால் மதுமதி போலீசார் எந்தெந்த வகையில் குற்றவாளிகளை தேடி பிடிப்பார்கள் என்று முன்கூட்டியே அதனை தெரிந்து கொண்டு அவ்வழிகளை கையாண்டு சாமர்த்தியமாக 25 நாட்கள்காவல்துறையின் கண்களின் விரலை விட்டு ஆட்டி உள்ளார். பின்பு ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் மதுமதி, கள்ளக்காதலன் கவின் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் திருடிய 12 சவரன் தங்க நகையில் 6 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்..
நிருபர் கு.கௌரிசங்கர்