ஆரணி அருகே இரும்பேடு பெரிய ஏரியில் முறைகேடாக இரவு நேரங்களில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும்மான சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் ஆதரவாளர் வண்டல்மண் கடத்தல் என பொதுமக்கள் குற்றசாட்டு.

ஆரணி அருகே இரும்பேடு பெரிய ஏரியில் முறைகேடாக இரவு நேரங்களில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும்மான சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் ஆதரவாளர் வண்டல்மண் கடத்தல் என பொதுமக்கள் குற்றசாட்டு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு பெரிய ஏரியில் இரவு நேரங்களில் ஒரு இட்டாஷ் வாகன உதவியுடன் மூன்று டாரஸ்லாரிகளில் வண்டல்மண் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.

கடத்தும் மண் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் ஆதரவாளருக்கு ஆரணி டூ போளூர் செல்லும் புறவழிசாலையில் புதியதாக நிருவப்படும் பெட்ரோல் பங்குக்கு தரைதளம் அமைக்க டாரஸ் வாகனங்களில் முறைகேடாக இரவு நேரங்களில் மண் கடத்தி பணியில் ஈடுப்பட்டு வருவதாக இதனை காவல் துறை வருவாய்துறை பொதுபணி துறையினர்கள் ஆகிய அதிகாரிகள் கண்டும் கானாமலும் அலட்சியம் காட்டி வரூவதாக பொதுமக்கள் குற்றசாட்டி வருகின்றனர். நேற்று பகலில் மண்கடத்தலை அப்பகுதி மக்கள் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியனுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை தடுக்கும் வகையில் வருவாய்துறை அலுவலர்களோடு நேரில் வந்து மண்கடத்தலில் ஈடுப்படும் வாகனங்களை தடுத்தி நிறுத்தி உரிய ஆவணங்களை காண்பிக்க கேட்டுகொண்டுள்ளனர்.

அதில் விவசாய பணிக்காக வண்டல் மண் எடுத்தல் என்றும் அதற்கான மூன்று டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபியை பயன்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளன என்பதனையும் கண்ட ஆரணி கோட்டாட்சியர் அதிர்சியடைந்து அனுமதி மறுத்துள்ளார்.

இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் அதிக கனரகவாகனங்களை கொண்டு முறைகேடாக மண்கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகின்றன என்று பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..