திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் சுமார் 5ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மைதானம் சுற்றி அனைத்து அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
மேலும் இந்த மைதானம் தற்போது விளையாட்டு துறை சார்பில் பராமரிக்கபட்டு வருகின்றன. இந்த மைதானத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட மற்றும் மாநிலங்ளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த மைதானம் கடந்த அதிமுக ஆட்சியில் எம்.பி நிதியில் சுற்றுசுவர் அமைத்து நடைபயிற்சி அமைக்கபட்டதால் தினமும் காலை மற்றும் மாலை வேலையில் ஆயிரகணக்கான பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமன்றி சிலம்பம் கராத்தே வாலிபால் கால்பந்து இறகுபந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் தினமும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது பெய்த பெஞ்சன் புயல் மழை காரணமாக ஆரணி கோட்டை மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகிதமாக உள்ளதால் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துகுள்ளாயி வருகின்றனர்.
உடனடியாக தமிழக துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆரணிக்கு அடையாளமாக விளங்கும் கோட்டை மைதானத்தை சீரமைத்து மழைநீர் செல்லவும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் பொருத்தி சீரான மின்சாரம் வழங்க வேண்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு?