திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் அருகில் உள்ள ஆரணி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமையில் சுமார்
50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்த இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல்
நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு
வந்து புதியதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிகக் சுரக்ஷா சன்ஹிதா,
பாரதிய சாஹக்ஷா அதிநயம், என கொண்டு வந்துள்ள புதிய சட்டம் ஜீலை 01 முதல்
அமுலுக்கு வருவதை எதிர்ப்பு தெரிவித்து
ஆரணி நீதிமன்ற வளாகத்தில் வழக்கிறஞர்கள் ஓருநாள் உண்ணாவிரதம் போராட்டம்
நடத்தி உடனடியாக மத்தி அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்தை
திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
நீதிமன்ற செய்திகளுக்காக பசுபதி