திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் 3 திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் உள்ளன இந்த மூன்று திரையரங்குகளில் தான் புதியதாக வரும் திரைப்படங்கள் வெளியாகின்றன.
தீபாவளி பொங்கல் மற்றும் பண்டிகை நாட்களில் வரும் முக்கிய நடிகர்களின் படம் வெளியானால் ஆரணி சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆரணியில் உள்ள மூன்று திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்க்கின்றனர்..
திரையரங்குகளில் படம் பார்க்க செல்லும் பொதுமக்கள் இடைவேளியின் போது அங்கு உள்ள கேன்டிங்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் பப்ஸ் போன்ற தின்பண்டங்கள் தரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்..
இது சம்பந்தமாக பொதுமக்கள் தொலைபேசி மூலம் பலமுறை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்..
அது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் 2 மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்…
இதற்கெல்லாம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது…
செய்தியாளர் பசுபதியுடன் ராஜசேகர்