ஆரணியில் கிளை நூலக சுவர்கள் மழையால் பாதிப்பு.

ஆரணியில் கிளை நூலக சுவர்கள் மழையால் பாதிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் முழு நேரக் கிளை நூலகம் இயங்கி வருகிறது.

மேலும் இந்த நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வாசிப்பு திறனை மேற் கொள்ளும் வகையிலும். பொது மக்கள் செய்தி வாசிப்பு மற்றும் பயிற்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் உறுப்பினர்களாக இணைந்து பயன் பெறுகின்றனர்.

மேலும் இந்த நூலக கட்டிடத்தில் மழை காலங்களில் மேற்கூறை அமைப்பில் தண்ணீர் தேங்கி வெளிப்புறச் சுவர் சேதமடைந்தது காணப்படுகிறது.

மேலும் தண்ணீர் தேங்கி புத்தகங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் புத்தக தாள்கள் சேதமடைவதாகவும் கூறப்படுகிறது. எனவே நூலகத்தை புனரமைப்பு செய்து பக்க சுவர் மற்றும் முகப்பு சுவர் உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..