ஆரணி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
மேலும் பள்ளி வளாகம் வெளிப்புறம் மற்றும் வழி நெடுங்கிலும் மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் ஏற்பாட்டில் திமுக கொடி கட்டப்பட்டு இருந்தன. மேலும் சுகாதாரத்துறை சார்பாக திமுகவில் உள்ள நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.
இதேபோன்று ஆரணி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முன்னாள் அமைச்சர் சேவூர்.எஸ் ராமச்சந்திரன் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் திமுகவில் உள்ள நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று கேட்டு அதற்கு முன்பாக நான் சென்று பார்வையிட்டு வந்து விடுகிறேன் என்று உத்தரவு பெற்று நிகழ்ச்சிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
பின்ன்ர் நிகழ்ச்சி கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து மருத்துவ முகாமினை பார்வையிட்டார் எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரனுடன் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சங்கர் ஜெயபிரகாஷ் நகர செயலாளர் அசோக்குமார் நகர மன்ற உறுப்பினர் ஏ.ஜி.மோகன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனையொடுத்து எம்.எல்.ஏ நிகழ்ச்சி முடித்து விட்டு சென்ற தகவல் திமுகவிருக்கு தகவல் தெரிந்த பின்னர் திமுக நிர்வாகிககள் மருத்துவ முகாமில் பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி மருத்துவ முகாமினை பார்வையிட்டனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திமுக நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு அதிமுக கொடியை மறந்து விட்டு திமுக கட்சி கொடி கட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
– நமது நிருபர்