கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி புதிய பேருந்து நிலையம் அமைந்தது தற்போது புதிய பேருந்து நிலையத்தை புனரமைக்க நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 6.40 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது புனரமைக்கபடவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்று தற்காலிக பேருந்து நிலையத்தை தேர்வு செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் முயன்று வந்தன.
இதனையடுத்து தற்காலிக பேருந்து நிலையத்தை ஆரணி கோட்டை மைதானத்தில் அமைக்கப்பட இடத்தை ஜேசிபி இயந்திரம் சீரமைத்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நகராட்சி ஆணையர் வேலவன் சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆனால் இடம் தேர்வு செய்து பின்னர் விளையாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியோர் அனுமதி மறுத்து தற்காலி பேருந்து நிலையம் தடுத்து நிறுத்தபட்டன.
இதனையடுத்து நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள டவுன் கிளப் இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த இடமும் தற்போது மறுக்கபட்டு அதே எதிரில் உள்ள நகராட்சி நூலகம் அருகாமையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் தேர்வு செய்யபட்டு இந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன.
ஆனால் இந்த இடத்தியும் தற்காலிக பேருந்து நிலையத்தை அமைய முட்டுகட்டை வந்துள்ளன இதனால் புதியதாக கட்டபடவுள்ள பேருந்து நிலையம் வருமா என கேள்வி தற்போது பொதுமக்களின் முன்னிலையில் எழுந்துள்ளன.
வந்தவாசி திருவண்ணாமலை தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்ல பொதுமக்களின் வசதிகேற்ப பேருந்து நிலையத்தை அமைக்க அரச முயற்சி செய்து வரும் போது முட்டுகட்டைகள் தொடர்ந்து வந்து வண்ணம் உள்ளதால் இதற்கு தற்போதைய அதிமுக ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஆளுங்கட்சிக்கு பெயர் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் நல்ல ஓரு திட்டத்தை மக்கள் பிரதிநிதியாக உள்ள எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் தடுப்பதாக ஆளுங்கட்சி குற்றசாட்டுகின்றனர்?…