ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவூர் தேவிகாபுரம் எஸ்.வி.நகரம் முள்ளிப்பட்டு மூனுகபட்டு ஒண்ணுபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வர்த்க்கான வடிவமைப்பை வைத்து விசைதறியில் (பவர்லூம் ) புடவை நெய்ந்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகின்றன.
இதனால் ஆரணியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை நெசவாளர்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த நெசவாளர்கள் சங்கம் சார்பில் பரமாத்மன் தலைமையில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஓன்றுணைந்து ஆரணி டவுன் கொசப்பாளையம் மைதானம் அருகிலிருந்து ஊர்வலமாக சுந்தரம் தெரு வழியாக காந்தி ரோடு மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். இதனால் ஆரணி முக்கிய வீதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்தது..

இதனையொடுத்து ஆரணி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையாக பட்டு கைத்தறி ரகங்களை விசைத்தறையில் பவர்லூம் உற்பத்தியை செய்வதை தடை செய்யவேண்டும் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 அமல்படுத்து அதிகாரிகள் விசைத்தறிகளை ஆய்வு செய்வதை அதிகரித்திடு அண்டை மாநிலங்களில் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் பட்டு ரகங்களை தடைசெய் என உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோட்டாச்சியர் தனலட்சமி விசைதறி தடை செய்ய கோரி மனுக்கள் அளித்தனர். ஆரணியில் நெசவாளர்களின் ஊர்வலத்தை ஆரணியே ஸ்தம்பித்து நின்றன..
செய்தியாளர் சு.ஞானப்பண்டிதன்