தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் வேட்பாளராக சோளிங்கர் பகுதியை சேர்ந்த A.L.விஜயன் என்பவரை கழக அதிமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டார் இதனை அடுத்து வாலாஜாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதியில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சம்பத், நகர கழக செயலாளர் W.G.மோகன், மாவட்ட கழக துணைச்செயலாளர் W.S.வேதகிரி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பூண்டி பிரகாஷ், மத்திய ஒன்றிய கழக செயலாளர் V.K.ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக அவைத்தலைவர் பேங்க் தேவராஜ், ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் கே.பி.சந்தோஷம், நகர கழக அவைத்தலைவர் ஆர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்..
தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேசுகையில்
இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் களம் சிறப்பாக உள்ளது ஆகவே நடைபெறுவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அல்ல இடைத்தேர்தல் என்று எண்ணி ஒவ்வொரு கழக நிர்வாகிகள் முதல் தொண்டன் வரை வெறித்தனமாக பணியாற்றினால் என்னுடைய தம்பியின் வெற்றியை எந்த கொம்பாதி கொம்பனாலும் வந்தாலும் தடுக்க முடியாது என கூறினார்..
நிகழ்ச்சியில் முன்னாள் நகர கழக செயலாளர் ஜே.பி.சேகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் உமர்பாரூக், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் அஜூஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏழில்அரசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, அஸ்லாம்கான், பூபாலன், சித்ராசந்தோஷம் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் அருள்..