ஆரணியில் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்
வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரையில்
அமர்ந்து அன்னாபிஷேகம் தானத்தை உண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டலநாகநதி ஆற்றுங்கரை அருகில் ஸ்ரீ
புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் வருடா வருடம் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளன.
மேலும் இன்று ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரஹன்நாயகி
என்கின்ற பெரியநாயகி சிறப்பு அலங்காரமாக வெண்டைகாய் கேரட் வாழைக்காய்
கோவக்காய் பீட்ரேட் உள்ளிட்ட காய்கறிகள் ஆப்பிள் ஆரஞ்ச் வாழைபழம் பல்வேறு
வகையான பழம் வகைகளால் அலங்காரிக்கபட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதே போல ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரருக்கு சாதத்தால் அன்னாபிஷேகம்
வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..

பின்னர் கோவில்
நிர்வாகம் சார்பில் ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்ரவர் ஆலய திருமண மண்டப
வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து அன்னாதானம் உண்டு
வழிப்பட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.