ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதி சேர்ந்த தாமோதரன்(51) இவருக்கு சங்கரி என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.
மேலும் தாமோதரன் சரியாக வேலைக்கு போகாத காரணத்தினால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு சாமியாராக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோயிலில் தஞ்சமடைவார்.
இந்நிலையில் தற்போது தனது சொந்த வீட்டிற்கு வந்த போது அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களின் புகாரின் பேரில் தாமோதரன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த. 1400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலை ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
ReplyReply allForwardAdd reaction |