தமிழகத்தின் 2வது பெரிய சந்தையை குப்பை கிடங்காக மாற்றிய அவலம். வாரச்சந்தையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் நோய் தொற்று பரவும் அபாயம்.

தமிழகத்தின் 2வது பெரிய சந்தையை குப்பை கிடங்காக மாற்றிய அவலம். வாரச்சந்தையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் நோய் தொற்று பரவும் அபாயம்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக 2வது பெரிய சந்தையாக விளங்குகின்றன. வாரநாட்களில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் கால்நடை சந்தை இயங்கும்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகைபுரிவதால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.

மேலும் நகராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் தொடங்கபட்டு நகராட்சி உட்பட்ட 18வார்டுகளில் சேகரிக்கபடும் குப்பைகளை உரம் தயாரிக்கும் குப்பைகளை கால்நடை சந்தை அருகே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் கடை தெருவில் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவு அபாயம் ஏற்பட்டுள்ளன

குவிக்கபட்ட குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக், மருத்துவ கழிவு, டயர்களை
தீயிட்டு கொளுத்துவதால் வாரச்சந்தை இடம் முழுவதும் கரும்புகை எழுகிறது.

மேலும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வார சந்தையில் அருகாமையில் உள்ள குப்பை கிடங்கு அப்புறப்படுத்த பொதுமக்கள் நகராட்சிக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடைகள் அமைத்து பல்வேறு வியாபாரம் செய்து ரம்மியமாக காட்சியளிக்கப்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்காக மாற்றிவிட்டது என பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.

உடனடியாக குப்பைக் கிடங்கு அகற்றாவிட்டால் மாடுகளைகொண்டு சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கால்நடை சந்தை வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..