ஆரணி அருகே அதிமுக கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியநெடுஞ்சாலை துறை வருவாய் துறையினரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு..

ஆரணி அருகே அதிமுக கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியநெடுஞ்சாலை துறை வருவாய் துறையினரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு..

ஆரணி அருகே அதிமுக கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றிய
நெடுஞ்சாலை துறை வருவாய் துறையினரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில்
ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கூட்ரோடு ஆரணி சென்னை
சாலையில் கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய அதிமுகவில் இருந்த ஏ.சி.சண்முகம்
கட்சி கொடி கம்பத்தை வைத்து கொடி ஏற்றி வைத்துள்ளார்.

மேலும் தற்போது அதிமுகவினர் 52ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இரும்பேடு
கிராமத்து கூட்ரோடில் உள்ள கட்சி கொடி கம்பம் சீரமைப்பு பணி செய்து அதனை
நெடுஞ்சாலை துறை சொந்தமான சாலை வரையில் சிமெண்ட் சாலையில்
போடப்பட்டுள்ளதாக கூறி நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை ஆகியோர்களுக்கு
கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர்
ஓன்றுணைந்து இரும்பேடு கூட்ரோடு அருகில் இருந்த அதிமுக கட்சி கொடி
கம்பத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் கம்பத்தை அகற்றினார்கள்.

இதனால்
கொதிப்படைந்த அதிமுகவினர் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான
சேவூர் ராமசந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் ஆகியோர்
தலைமையில் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில்
குவிந்து வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார்
குவிக்கபட்டு அதிமுகவினரிடை பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இதனையடுத்து
வருவாய் துறை மூலம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தில முடித்து கொள்ள
போலீசார் அறிவுறுத்தியதால் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

மீண்டும் அதே இடத்தில் அதிமுக கட்சி கொடி கம்பம் வைக்க அதிமுகவினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..