செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கம் திட்டம் தொடங்கிய அதிமுக முடக்க முயலும் அதிமுக குழப்பத்தில் கிராம பொதுமக்கள்..

செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கம் திட்டம் தொடங்கிய அதிமுக முடக்க முயலும் அதிமுக குழப்பத்தில் கிராம பொதுமக்கள்..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்ட பணிக்காக கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3300 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகபடுத்தி சிப்காட் விரிவாக்கம் திட்ட பணிக்கு உத்தரவு பிறப்பித்தார்..

மேலும் இத்திட்டத்திற்கு அனக்காவூர் ஊராட்சிக்குபட்ட மேல்மா, தேதுறை, குரும்பூர், நர்ம பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3300 ஏக்கர் விளை நிலங்களை அரசு சார்பில் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தொடங்கபட்டன.

இதனையொடுத்து ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தற்போது நிலம் கையபடுத்தும் பணியில் ஈடுபட்ட போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறி 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்து பல நாட்களாக பந்தல் அமைத்து தொடர் போராட்டமாகவும் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தொடர்து நிலம் கையகபடுத்த பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமை அறிவித்து ஆர்பாட்டம் காஞ்சிபுரம் வந்தவாசி சாலை மேல்மா கூட்ரோடு அருகில்; திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடைபெற்றது.

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் விலை நிலங்களை கையகப்படுத்தி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் மேல்மா சிப்காட் விரிவாக்கம் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ~ங்கள் எழுப்பியும் கண்டன கோ~ங்களையும் எழுப்பினார்கள். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாவட்ட செயலாளர் தூசி மோகன் பேசும் போது குறுக்கீட்ட செய்தியாளர்கள் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேல்மா சிப்காட் திட்டத்தை கொண்டு வந்த அதிமுக தற்போது நிலம் கையகபடுத்தும் பணியை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பியதையொடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை அதிமுக நிர்வாகிகள் புறக்கணித்து விட்டு சட்டென கிளம்பினார்கள். சிப்காட் திட்டத்தை தொடங்கிய அதிமுக அதனை எதிர்ப்பு தெரிவித்து முடக்க கண்டன போராட்டம் நடத்துவதால் கிராம பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..