திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் அதிமுக மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு தலைமையில் 25வது வார திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆரணி எம்.எல்.ஏ.சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார் பின்னர் எஸ்.வி.நகரம் கிராமத்தில் வீதி வீதியாக சென்று அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தற்போதைய ஆட்சியின் அவல நிலை குறித்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆரணி எம்.எல்.ஏ.சேவூர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் ஆகியோர்துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்.
இதில் மாவட்ட இணை செயலாளர் வனிதா சதிஷ், நகர செயலாளர் அசோக் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பானுப்ரியா பாரதிராஜா, விநாயகம், ஏ.ஜி.மோகன், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஜெ.பேரவை.ஒன்றிய செயலாளர் புங்கம்பாடி சுரேஷ், மீனவர் அணி ஆனந்த், நிர்வாகிகள் ஜீப் செல்வம், உமாபதி, மில் சரவணன், ஐ.டி.விங் பிரசாந்த், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு.